புதுச்சேரி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு விவகாரம்.. குடியரசு துணைத் தலைவரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்த சபாநாயகர்!
Reservation for Puducherry students Speaker meets Vice President
புதுச்சேரியில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு 25 சதவீத இடங்கள் ஒதுக்கி சேர்க்கை வழங்க வேண்டும் என குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தங்கரை சபாநாயகர் செல்வம் நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தார்,
புதுச்சேரியில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு 25 சதவீத இடங்கள் ஒதுக்கி சேர்க்கை வழங்க வேண்டும் என திமுக ,காங்கிரஸ் மற்றும் பல்வேறு அமைப்பினர் நீண்ட நாட்களாக கோரிக்கைவிடுத்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்திவந்தனர்,மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவர்களும் போராட்டம் நடத்தினர்.மேலும் இது தொடர்பாக மத்திய ,மாநில அரசுக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டது.அதற்காக புதுச்சேரி அமைச்சர்கள்,எம்.பிக்கள் மத்திய அமைச்சர்களை நேரில் சந்தித்து புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு 25 சதவீத இடங்கள் ஒதுக்கி சேர்க்கை வழங்க வேண்டும் எனகோரிக்கை விடுத்தது வந்தனர்.
இந்தநிலையில் குடியரசு துணைத் தலைவரும் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஜெகதீப் தங்கரை, குடியரசு துணைத் தலைவர் இல்லத்தில் சபாநாயகர் செல்வம் மரியாதை நிமித்தமாக சந்தித்தார் .
அப்போது புதுச்சேரியில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு 25 சதவீத இடங்கள் ஒதுக்கி சேர்க்கை வழங்க வேண்டும் என சபாநாயகர் கோரிக்கை வைத்தார்,
குடியரசு துணைத் தலைவர் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களின் நலனைக் காக்கும் வகையில் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
English Summary
Reservation for Puducherry students Speaker meets Vice President