அதிரடியாக குறையும் தங்கம் விலை - மகிழ்ச்சியின் உச்சியில் இல்லத்தரசிகள்.! - Seithipunal
Seithipunal


பாராளுமன்றத்தில் நேற்று நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில், தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டது. இந்த வரி குறைப்பால் தங்கம் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து நேற்றே மதியமே தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,200 குறைந்து ஒரு சவரன் ரூ.52,400-க்கும் கிராமுக்கு ரூ.275 குறைந்து ஒரு கிராம் ரூ.6,550-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. அதன் படி சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ.51,920-க்கும் கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ6,490-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல், வெள்ளி விலையும் குறைந்துள்ளது. அதாவது கிராமுக்கு 50 பைசா குறைந்து ஒரு கிராம் 92 ரூபாய்க்கும் கிலோவுக்கு ரூ.500 குறைந்து பார் வெள்ளி ரூ.92ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

24 07 2024 today gold and silvar price


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->