இந்தியாவில் கிடைக்கும் 3 சிறந்த சிக்கனமான CNG கார்கள்!இவ்வளவு மைலேஜா? இனி பைக் இல்ல, எல்லார் விட்டிலும் கார் தான்!
3 best economical CNG cars available in India So much mileage No more bikes everyone has cars
இந்தியாவில் பெட்ரோல் விலைகள் உயர்ந்து கொண்டிருக்க, மக்கள் எரிபொருள் செலவுகளை குறைக்கும் புதிய வழிகளை தேடுகிறார்கள். இந்த நிலையில், CNG கார்கள் (கம்பிரெஸ்ட் நேச்சுரல் கேஸ் கார்கள்) சிறந்த மாற்றாக உருவெடுத்துள்ளன. தற்போது இந்தியாவில், மலிவு விலையிலிருந்தும் பிரீமியம் பிரிவுவரை பல்வேறு CNG கார்கள் கிடைக்கின்றன.
நீங்களும் தினசரி பயணச் செலவுகளை குறைக்க விரும்பினால், இந்தியாவில் தற்போது கிடைக்கும் மூன்று சிறந்த சிக்கனமான CNG கார்களை இங்கு பார்க்கலாம். இவை உங்கள் பணத்திற்கு சிறந்த மதிப்பை தரும் என்று உறுதி செய்யலாம்!
மாருதி சுசுகி ஆல்டோ K10 CNG
மாருதி ஆல்டோ K10 நாட்டின் மிகவும் மலிவான மற்றும் நம்பகமான CNG கார்களில் ஒன்றாகும்.
-
இந்த காரில் 1.0 லிட்டர் K10C பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது, இது 49kW பவர் மற்றும் 89Nm டார்க் வழங்குகிறது.
-
5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஜிஎஸ் கியர்பாக்ஸ் வசதி உள்ளது.
-
மைலேஜ்:
-
பெட்ரோல் மேனுவல்: 24.39 கிமீ/லிட்டர்
-
பெட்ரோல் AMT: 24.90 கிமீ/லிட்டர்
-
CNG பயன்முறை: 33.85 கிமீ/கிலோ
-
பாதுகாப்பு அம்சங்கள்: 6 ஏர்பேக்குகள், ABS (EBD உடன்), சீட் பெல்ட் அலர்ட், டிஸ்க் பிரேக்குகள்.
-
27 லிட்டர் பெட்ரோல் தொட்டி மற்றும் 55 லிட்டர் CNG தொட்டி கொண்டுள்ளது.
மலிவு விலை மற்றும் சிறந்த மைலேஜை தேடும் நபர்களுக்கு ஆல்டோ K10 சிறந்த தேர்வாகும்.
டாடா டியாகோ iCNG
டாடா டியாகோ CNG குடும்ப பயணிகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
-
இதில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் உள்ளது, இது 73hp பவர் மற்றும் 95Nm டார்க் உருவாக்குகிறது.
-
5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.
-
மைலேஜ்: 27 கிமீ/கிலோ (CNG பயன்முறை).
-
விலை: ரூ.5.65 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்).
-
பாதுகாப்பு அம்சங்கள்: உயர் தர பாதுகாப்பு உட்கட்டமைப்பு, பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள்.
மாருதியின் கார்களை விட குறைவான மைலேஜ் அளிக்கிறது என்றாலும், வலிமையான உட்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் மூலம் பயணிகளின் நம்பிக்கையை ஈர்க்கிறது.
மாருதி செலெரியோ CNG
மாருதி செலெரியோ CNG ஸ்மார்ட் லுக் மற்றும் சிறந்த மைலேஜால் பயணிகளை கவர்கிறது.
-
இதில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.
-
மைலேஜ்: 34.43 கிமீ/கிலோ (CNG பயன்முறை).
-
விலை: ரூ.5.64 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்).
-
பாதுகாப்பு அம்சங்கள்: EBD உடன் ABS, ஏர்பேக்குகள், சீட் பெல்ட் அலர்ட்.
-
சிறிய வடிவமைப்பும், நகர போக்குவரத்தில் சுலபமாக ஓட்டக்கூடிய வசதியும் இதில் உள்ளது.
சிறந்த மைலேஜ் தேடும் நபர்களுக்கு செலெரியோ CNG ஒரு ஸ்மார்ட் தேர்வாக அமைகிறது.
இன்று இந்தியாவில் பைக்குகளே 30 கிமீ மைலேஜ் வழங்குவது பெருமையாக பேசப்படுகிறது. ஆனால் இங்கு குறிப்பிட்டுள்ள CNG கார்கள் 27 முதல் 34 கிமீ வரை மைலேஜ் வழங்கி, தினசரி பயணச் செலவுகளை பெரிதும் குறைக்க உதவுகின்றன. உங்கள் தேவைகள் மற்றும் பட்ஜெட்டைப் பொருத்து, இந்த மூன்று கார்களில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து உங்கள் பயணத்தை சிக்கனமாகவும் பாதுகாப்பாகவும் மாற்றிக்கொள்ளலாம்.
English Summary
3 best economical CNG cars available in India So much mileage No more bikes everyone has cars