பிரீமியம் ஹேட்ச்பேக் காரான அல்ட்ரோஸ்! அதிரடி ஆஃபர்: Altroz காரில் ரூ.2.05 லட்சம் தள்ளுபடி வழங்கும் டாடா!
Altroz a premium hatchback car Action offer Tata offers Rs 2 05 discount on Altroz car
சென்னையைச் சேர்ந்த Tata Motors நிறுவனம், தனது பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலான Altroz காரின் MY2023 மாடல்களுக்கு, அதிகபட்சமாக ரூ.2.05 லட்சம் வரை தள்ளுபடியை அறிவித்துள்ளது. டிசம்பர் மாதம் முழுவதும் இந்த சலுகை உள்ளதால், வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆர்வம் பெருகியுள்ளது.
Altroz காரின் ஆரம்ப விலை ₹6.50 லட்சம், அதிகபட்ச விலை ₹11.16 லட்சம் வரை உள்ளது. 46 மாடல்களில் பெட்ரோல், டீசல் மற்றும் CNG என மூன்று எரிபொருள் வகைகளில் கிடைக்கின்றது.
MY2023 மாடல்களுக்கு தள்ளுபடி: ₹2.05 லட்சம் வரை,MY2024 மாடல்களுக்கு தள்ளுபடி: ₹60,000 வரை,Altroz Racer மாடலுக்கு: ₹80,000 வரை
Altroz காரில் நான்கு விதமான பவர்டிரெயின் வழங்கப்பட்டுள்ளன: 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின்: 87bhp பவர், 115Nm டார்க்,1.2 லிட்டர் டர்போ பெட்ரோல்: 108bhp பவர், 140Nm டார்க்,1.5 லிட்டர் டீசல்: 89bhp பவர், 200Nm டார்க்,CNG: 73bhp பவர், 103Nm டார்க்
அனைத்து மாடல்களும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டு வருகின்றன. 1.2 லிட்டர் பெட்ரோல் மாடலில் மட்டும் 6-ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.
Altroz Racer மாடலில் மேம்பட்ட உள் அமைப்புகள் மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன: காற்றோட்டமுடைய முன் இருக்கைகள்.10.25 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம். 10.16 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல். வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே இணைப்பு. புஷ்-பட்டன் ஸ்டார்ட் மற்றும் ஸ்மார்ட் கீ.தானியக்க காலநிலை கட்டுப்பாடு
Altroz இந்தியாவில் மாருதி பலேனோ, டொயோட்டா கிளான்சா, மற்றும் ஹூண்டாய் i20 ஆகிய மாடல்களுடன் கடுமையாக போட்டியிடுகிறது.
இந்த மாத சலுகைகள் மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன், Altroz மேம்பட்ட ஹேட்ச்பேக் மாடலாக வாடிக்கையாளர்களை தன் பக்கம் இழுத்துக்கொள்ளும் என விலாசிக்கப்படுகிறது.
English Summary
Altroz a premium hatchback car Action offer Tata offers Rs 2 05 discount on Altroz car