நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க முடியாது - சீமான் மீது சென்னை ஐகோர்ட்டு காட்டம்!  - Seithipunal
Seithipunal


 பிடிவாரண்டை ரத்து செய்வது குறித்து சீமான் தரப்பு மீண்டும் விக்கிரவாண்டி கோர்ட்டை நாடலாம் என்றும்  இந்த வழக்கில் சீமான் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என்றும் சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது 

கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பரப்புரையின்போது, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து பேசியது பெரும்  சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் நிர்வாகிகள் கொடுத்த புகாரின் பேரில் கஞ்சனூரில் போலீசார் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக சீமான் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதனை தொடர்ந்து இந்த வழக்கு விக்கிரவாண்டி கோர்ட்டில் நடந்து வந்த நிலையில் சீமானுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

இந்தநிலையில்  பிடிவாரண்டை ரத்து செய்யக்கோரி சீமான் தரப்பில் விக்கிரவாண்டி கோர்ட்டில் மேல்முறையீட்டு செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம்  தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.இதனைத்தொடர்ந்து பிடிவாரண்டை ரத்து செய்யக்கோரி சீமான் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது.இந்தநிலையில்  இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்றது.

அப்போது சீமானின் பேச்சு வன்முறையை தூண்டியது என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை என சீமான் தரப்பில் நீதிபதியிடம் வாதிடப்பட்டது. மேலும் இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகாததால் சீமானுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்றும் நீதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வாதங்களை கேட்ட நீதிபதி பிடிவாரண்டை ரத்து செய்வது குறித்து சீமான் தரப்பு மீண்டும் விக்கிரவாண்டி கோர்ட்டை நாடலாம் என்றும்  இந்த வழக்கில் சீமான் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என்றும்  சென்னை ஐகோர்ட்டு கூறியது. மேலும் சீமானின் மனுவுக்கு பதிலளிக்கும்படி காவல் துறைக்கு உத்தரவிட்டு, இதையடுத்து வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (பிப்ரவரி) 6-ம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை ஐகோர்ட்டு.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

 Seeman can t be exempted from personal appearance: Madras HC 


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->