பி.எஃப் வட்டி உயர்வுக்கு மத்திய அரசு ஒப்புதல்.! எவ்வளவு தெரியுமா? - Seithipunal
Seithipunal


கடந்த மார்ச் 2022ல்  2021-2022ம் ஆண்டுக்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மீதான வட்டியை மத்திய அரசு 8.10% என குறைத்தது. இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் டெல்லியில் நடைபெற்ற தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மத்திய அறக்கட்டளை வாரிய குழு கூட்டத்தில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் 2022-2023ம் ஆண்டுக்கான வருங்கால வைப்பு நிதி வட்டி வகிதம் உயர்த்துவதாக அறிவித்தது.

 

அதன் அடிப்படையில் 8.10% லிருந்து 8.15% ஆக வட்டி விகிதம் உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த வட்டி விகிதமானது 2022-2023ம் ஆண்டு வருங்கால வைப்பு நிதி வட்டிவிகித உயர்வு வழங்க நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. இந்நிலையில் நிதியமைச்சகத்தின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றதால் புதிய வட்டி விகிதத்தை வழங்குமாறு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அந்த சுற்றறிக்கையில் வரும் ஆகஸ்டு மாதம் முதல் உயர்த்தப்பட்ட வட்டியின் பலன் அனைத்து சந்தாதரர்கள் கணக்கில் கிடைக்கும் எனவும், இதன் மூலம் நாடு முழுவதும்7 கோடி பேர் பயனடைவார்கள் எனக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் பிஎஃப் வட்டி விகிதத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Central govt approves PF interest rate hike


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->