மெட்ரோவில் இனி சாப்பிட அனுமதி இல்லை - மெட்ரோ நிர்வாகம் அதிரடி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


சென்னையில் மக்களின் பயணத்தை எளிமையாக்கவும், விரைவாக்கவும் பல்வேறு போக்குவரத்து திட்டம் உள்ளது. அதில் முக்கியமானது மெட்ரோ ரெயில் திட்டம். இந்தத் திட்டம் சென்னையில் பல்வேறு இடங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பயணம் செய்வதற்கு சில விதிகளும் உள்ளது.

இந்த நிலையில், மெட்ரோ ரெயிலில் பயணிகள் உணவு உட்கொள்ள அனுமதி இல்லை என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்து இருப்பதாவது:-

"மெட்ரோ பயணிகளுக்கு ஒரு மென்மையான நினைவூட்டல். சென்னை மெட்ரோ ரெயில்களுக்குள் உணவு உட்கொள்ள அனுமதி இல்லை. அனைத்து பயணிகளுக்கும் சுமூகமான மற்றும் இனிமையான பயணத்தை உறுதி செய்ய மெட்ரோ நெறிமுறைகளைப் பின்பற்றவும்" என்றுத்  தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

metro administration order no food allowed in metro train


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->