திடீர் ஆய்வு - 29 பள்ளிகளுக்கு பறந்த நோட்டீஸ்.! சி.பி.எஸ்.இ அதிரடி.!! - Seithipunal
Seithipunal


சி.பி.எஸ்.இ.யின் விதிகள் மற்றும் விதிமுறைகளை மீறியதற்காக இந்தியாவில் உள்ள 29 பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் கடிதம் அனுப்பியுள்ளது.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் கடந்த மாதம் டெல்லி, பெங்களூரு, பாட்னா, பிலாஸ்பூர், வாரணாசி, அகமதாபாத் உள்ளிட்ட இடங்களில் உள்ள பள்ளிகளில் திடீரென ஆய்வுகள் நடத்தியது. இந்த ஆய்வுகளில் பெரும்பாலான பள்ளிகள் சி.பி.எஸ்.சி இணைப்பு துணை சட்டங்களை மீறியிருப்பது கண்டறியப்பட்டது. 

இதன் காரணமாக சம்பந்தப்பட்ட 29 பள்ளிகளுக்கும் காரணம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளிக்கும் அந்தந்த ஆய்வு அறிக்கையின் நகல் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 30 நாட்களுக்குள் தங்கள் பதில்களைச் சமர்ப்பிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சேர்க்கை முறைகேடுகள், கல்வி மற்றும் உள்கட்டமைப்பு விதிமுறைகளை பின்பற்றாதது உள்ளிட்டவை குறித்து ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி, ரிச்மண்ட் குளோபல் பள்ளி, நாராயண ஒலிம்பியாட் பள்ளி, நவீன கல்வி அகாடமி, ராஜ் ஆங்கில பள்ளி உள்ளிட்ட 29 பள்ளிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cbse notice send to 29 schools in india


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->