ரூ.1.84 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி வசூல்! மத்திய அரசு சொன்ன நல்ல செய்தி!
GST Report Feb 2025
நடப்பு நிதியாண்டில் ஜிஎஸ்டி வரி வருவாய் அதிகரிக்கும் என்று மத்திய அரசு கணித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் 9.1 சதவீதம் அதிகரித்துள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.1.68 லட்சம் கோடி வசூலான நிலையில், தற்போது ரூ.1.84 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
உள்நாட்டு வருமானம் மற்றும் இறக்குமதியின் மூலம் கிடைத்த வருமானத்தின் அதிகரிப்பால், பிப்ரவரி மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் 10 சதவீதம் அதிகரித்துள்ளது.
பிப்ரவரி மாதத்தில் மத்திய ஜிஎஸ்டி ரூ.35,204 கோடியாகவும், மாநில ஜிஎஸ்டி ரூ.43,704 கோடியாகவும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.90,870 கோடியாகவும், கூடுதல் வரி ரூ.13,868 கோடியாகவும் வசூலாகியுள்ளது.
இதன் மூலம் மொத்தம் ரூ.1.84 லட்சம் கோடி வசூலாகியுள்ளது என்று நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
நடப்பு நிதியாண்டில் ஜிஎஸ்டி வருவாய் 11 சதவீதம் அதிகரிக்கும் என்று மத்திய அரசு கணித்துள்ளது.