தங்க பிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி; இனிவரும் காலங்களில் தங்கத்தின் விலை அதிரடியாக குறையும் என தகவல்..! - Seithipunal
Seithipunal


வரும் நாட்களில் தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க அளவு சரிவு வரக்கூடும் என்றும், இது வாங்குபவர்களுக்கு நிவாரணம் அளிக்கக்கூடும் என்றும் சந்தை ஆய்வாளர்கள் ககூறியுள்ளனர்.

இதன்படி தங்கத்தின் விலையானது 38 சதவீதம் வரை குறைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட நிதிச் சேவை நிறுவனத்தின் சந்தை நிபுணர் ஜான் மில்ஸ் குறிப்பிட்டுள்ளார். அதாவது, ஒரு அவுன்ஸ் $3,080 இருந்து $1,820 வரை குறையலாம் என்றும் அவர் கணித்திதுள்ளார்.

மார்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராம் ரூ.89,510 என்று இருந்தது. இந்த விலை ரூ.55,496 ஆகக் குறையலாம் என கணிக்கப்பட்டுள்ளது.  தங்கத்தின் விலையில் தற்போது ஏற்ற இறக்கமான போக்கு இருக்கிறது. 

இருப்பினும், மில்ஸ் மற்றும் பிற சந்தை ஆய்வாளர்கள், தங்க விலை வரும் நாட்களில் கூர்மையான சரிவை சந்திக்க கூடும் என்று தெரிவித்துள்ளனர். இந்நிலையில், உலகளவில் தங்க சேமிப்பு 09 சதவீதம் அதிகரித்து 2,16,265 டன்னாக உயர்ந்திருக்கிறது. 

அதிலும் குறிப்பாக, ஆஸ்திரேலியா தங்கம் உற்பத்தியை அதிகரித்துள்ளது.  உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் இருக்கும் மத்திய வங்கிகளில் தங்கம் 1,000 டன்னுக்கும் அதிகமாக இருப்பு இருக்கிறது.  

இது தொடர்பான ஆய்வு ஒன்று கூறுகையில், 71 சதவீத வங்கிகள் தங்கத்தை வாங்கி குவிக்க விரும்பவில்லை என்று கூறியிருக்கின்றன. எனவே தங்கத்தின் தேவை குறைய தொடங்கியுள்ளது. இதனால், முதலீட்டாளர்களும் இன்னும் கொஞ்ச காலத்தில் தங்கத்திற்கு மாற்றாக வேறு ஒரு விஷயத்தில் முதலீடு செய்ய தொடங்குவார்கள். எனவே, தங்கத்தின் விலை மளமளவென குறையும் என்று சந்தை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Information that the price of gold will decrease dramatically in the coming times


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->