விஜயின் ‘ஜன நாயகன்’ சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய சன் டிவி – ரூ.55 கோடி டீல்! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படமாக உருவாகி வரும் ‘ஜன நாயகன்’ படம், தமிழ் திரையுலகில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல், கெளதம் மேனன், பிரியாமணி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த மெகா படத்தை, ‘கேவிஎன்’ நிறுவனம் தயாரித்து வருகிறது, மேலும் இசையமைப்பாளர் அனிருத் இப்படத்துக்கு இசையமைக்கிறார். படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இதற்கான சாட்டிலைட் உரிமையை சன் டிவி ரூ.55 கோடிக்கு வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 விஜயின் கடைசி படம் – அரசியலுக்கான கடைசி அடியெடுத்துவிடாரா?

‘ஜன நாயகன்’ விஜய்க்கான கடைசி திரைப்படமாக இருக்கும், அதன் பிறகு அவர் அரசியலுக்கு முழுமையாக செல்வதாக அறிவித்துள்ளார். ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கிய விஜய், திமுகவை நேரடியாக எதிர்த்துப் பேசிவருகிறார். ஆனால், தற்போது திமுகவின் ஆதிக்கத்திலுள்ள சன் டிவியுடன் பிசினஸ் டீல் செய்திருக்கிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

சன் டிவி – ஜன நாயகன் ஒளிபரப்பு சர்ச்சை

சன் டிவி பொங்கலுக்கு வாங்கும் படங்களை பொதுவாக தமிழ் புத்தாண்டுக்கு (ஏப்ரல்) ஒளிபரப்புவது வழக்கம். ஆனால், 2026 தமிழ் புத்தாண்டின் போது தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால், அப்போது ‘ஜன நாயகன்’ ஒளிபரப்பினால் அது விஜய்க்கு அரசியல் பிரச்சாரம் ஆகிவிடும் என்பதால், இப்படத்தை ஒளிபரப்பும் விவகாரம் தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது.

இதை பார்த்த நெட்டிசன்கள், "மேடையில் திமுக-வை குறை கூறும் விஜய், பின்னால் அவர்களிடமே பிசினஸ் டீல் பேசுகிறாரா?" என விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.

பொங்கல் ரிலீஸ் உறுதி – ஆனால் தொலைக்காட்சி ஒளிபரப்பு எப்போது?

‘ஜன நாயகன்’ பொங்கல் 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என உறுதியாகியுள்ளது. ஆனால், சன் டிவி தமிழ் புத்தாண்டுக்கு ஒளிபரப்புமா அல்லது தேர்தல் முடிந்த பிறகு ஒளிபரப்புமா என்பது தற்போது ரசிகர்களிடையே பெரும் கேள்வியாக உள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sun TV acquires satellite rights for Vijay Jananayakan Rs 55 crore deal


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->