நான் வாங்காத கடனுக்கு, என் வீட்டை ஏன் ஜப்தி செய்ய வேண்டும்?- சிவாஜி வீடு வழக்கு நடிகர் பிரபு
didnt take loan my house confiscated Actor Prabhu Sivaji House case
'அன்னை இல்லம்' மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக சில வாரங்களுக்கு முன்பு நடிகர் பிரபு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

அந்நேரம் நடிகர் பிரபு, "சகோதரர் ராம்குமார் பெற்ற கடனுக்கான எனக்கு சொந்தமான ரூ150 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. என் வாழ்நாளில் ஒரு ரூபாய் கூட கடன் வாங்கியது இல்லை" பிரபு தரப்பு தெரிவிக்கப்பட்டது.
இதற்கு நீதிபதிகள், "ராம்குமார் உங்களுடைய சகோதரர்தானே? இப்போது அந்தக் கடன்களை நீங்கள் செலுத்திவிட்டு பிறகு அவரிடம் பெற்றுக்கொள்ளலாமே?" எனக் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த பிரபு தரப்பினர்,"நிறைய பேரிடம் ராம்குமார் கடன் வாங்கியுள்ளார். நாங்கள் உதவ முடியாது" எனச் சுட்டிக்காட்டி குறிப்பிட்டுள்ளார்.
இரு தரப்பு வாதங்களை தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பான விசாரணை வரும் 8ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும் இது குறித்து சினிமா ரசிகர்கள் 'அண்ணனுக்கு உதவ முன் வரவில்லை பிரபு' என்று பலர் விமர்சித்து வருகின்றனர்.
English Summary
didnt take loan my house confiscated Actor Prabhu Sivaji House case