சில வியாபாரிகள் தர்பூசணி நிறத்திற்காக ரசாயன ஊசி போடுகின்றனர் என்பது தவறு..!!!- உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்
wrong that some traders injecting chemicals watermelons them color Food Safety Officer Satish
உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ், தர்பூசணி பழங்களில் ரசாயனங்கள் கலப்பதாக வெளியாகும் வதந்திகளை நம்பாதீர்கள் எனத் தெரிவித்துள்ளார்.

இதில் நல்ல தர்பூசணிக்கும், ரசாயன நிறம் கலந்த தர்பூசணிக்கும் உள்ள வேறுபாடு குறித்து அவர் விளக்கினார்.மேலும் இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது,"தர்பூசணியில் எல்லா வியாபாரிகளும் ரசாயனம் கலப்பதாக நாங்கள் சொல்லவே இல்லை.
தர்பூசணி பழங்கள் உடல்நலத்திற்கு ஏற்றவை. அவற்றை தாராளமாக சாப்பிடலாம்.சென்னையில் ஊசி மூலமாக ரசாயனம் செலுத்தி செயற்கையாக நிறமூட்டப்படுவதாக எங்கும் கண்டறியப்படவில்லை.
சென்னையின் ஒரு சில இடங்களில் கெட்டுப் போன பழங்கள் விற்கப்படுவது மட்டுமே ஆய்வில் கண்டறியப்பட்டது. எல்லா இடங்களிலும் தர்பூசணிகளில் நிறமூட்டி பயன்படுத்துவதாக கருதுவது தவறு" என விளக்கம் அளித்துள்ளார்.
இந்தச் செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
English Summary
wrong that some traders injecting chemicals watermelons them color Food Safety Officer Satish