நாமக்கல் | தொடர்ந்து அதிகரித்த முட்டை விலை! பண்ணையாளர்கள் மகிழ்ச்சி.! - Seithipunal
Seithipunal


நாமக்கல் மாவட்டத்தில் 5 கோடிக்கும் அதிகமான முட்டை உற்பத்திகள் செய்யப்படுகிறது. இந்த முட்டைகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்கான விலையை தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்வாகம் நிர்ணயம் செய்து அதன் படி பண்ணையாளர்கள் முட்டையை விற்பனை செய்து வருகின்றனர். 

இந்நிலையில் முட்டை விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகிறது. அதன்படி கடந்த 30ஆம் தேதி 420 காசுகளாக உயர்ந்த நிலையில் மே 1ஆம் தேதி 20 காசுகள் உயர்ந்தது. பின்னர் இரண்டாம் தேதி 20 காசுகள் உயர்ந்த நிலையில் நேற்று நாமக்கல் நடைபெற்ற முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை விலை மேலும் 20 காசுகள் உயர்ந்துள்ளது. 

இதனால் முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 480 காசுகளாக அதிகரித்துள்ளது. கடும் வெயிலால் முட்டை உற்பத்தி குறைந்ததால் விலை அதிகரித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பண்ணையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதன் மூலம் முட்டை விலை கலந்த மூன்று நாட்களில் 60 காசுகள் உயர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Namakkal Continued increased egg prices 


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->