வாங்குன கடனுக்காகத்தான் படம் பன்றேன் - நடிகர் சந்தானம் உருக்கம்.!
actor santhanam press meet
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக நடித்து வந்த சந்தானம் நாமே இனி ஹீரோவாக நடிக்கலாம் என முடிவெடுத்து பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் அன்புச்செழியனின் கோபுரம் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ஆனந்த் நாராயணன் இயக்கத்தில் சந்தானம், பிரியாலயா, தம்பி ராமைய்யா, விவேக் பிரசன்னா, பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் "இங்க நான் தான் கிங்கு". இந்தப் படம் இன்று வெளியானது.
இந்த நிலையில், இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பில் நடிகர் சந்தானம் பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, “எனக்கு நடிக்கிற வேலை இல்லையென்றால், பத்திரிக்கையாளர் பணிக்கு தான் வந்திருப்பேன். இந்த ஒரு வேலை தான் எப்போதும் பிஸியாக இருக்கிறது. கடைசியாக வடக்குப்பட்டி ராமசாமி படத்தைப் பார்த்து என்ஜாய் பண்ணிட்டு போனீங்க.
அதேமாதிரி இங்க நான் தான் கிங்கு படமும் சூப்பராகவும், ஜாலியாகவும் இருக்கும். கடன் வாங்கக்கூடாது என இந்த படத்தின் கதை இருக்கும். ஆனால் வாங்குன கடனுக்காகதான் இந்த படம் பண்ணியிருக்கேன். இந்த படத்தை எல்லாரும் பாருங்க” என்று பேசியுள்ளார்.
English Summary
actor santhanam press meet