அரசுப் பேருந்துகளை பார்த்தாலே பயமாக உள்ளது - எச்.ராஜா பரபரப்பு பேச்சு.! - Seithipunal
Seithipunal


மக்களவை தேர்தலில் மூன்றாவது முறையாக பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைத்து விட்டது என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”கேரள மாநிலம் வயநாடு பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி தோல்வி பயத்தின் காரணமாகவே ரேபரலி தொகுதியில் போட்டியிடுகிறார். என்னை பற்றியே விமர்சனம் செய்தவர்தான் சவுக்கு சங்கர். அவர் செய்தது தவறாக இருந்தாலும் கஞ்சாவை வைத்து கைது செய்து அவரது கையை உடைத்தது காவல்துறையின் அராஜக செயலாக உள்ளது.

மருத்துவ பரிசோதனையில் அவரது கையில் இரண்டு இடங்களில் எலும்பு முறிவு இருப்பதாக தெரிவித்துள்ளனர். சவுக்கு சங்கரை கைது செய்த போலீசார், பிரதமரை அவதூறாக பேசிய அமைச்சர்கள் தா மோ அன்பரசன், அனிதா ராதாகிருஷ்ணன் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. திமுகவினரின் வீடுகளில் இருந்துதான் ஜாபர் சாதிக் 2000 கோடி ருபாய் கஞ்சா கடத்தலுக்கு கொண்டு சென்றிருக்கிறார். முதல்வர் கஞ்சாவை ஒழிப்பது குறித்து காவல்துறையினருக்கு ஆலோசனை வழங்குவது வேடிக்கையாக உள்ளது. காவலர்களுக்கு பிடித்த கஞ்சாவை வெளியே தெரிவிக்காமல் இருப்பதற்காக ஆலோசனை வழங்குகிறார்கள்.

பயணிகள் பேருந்துகளின் உள்ளேயும் குடை பிடித்து தான் பயணிக்கின்றனர். அரசுப் பேருந்துகளை பார்த்தாலே பயமாக உள்ளது. பேருந்தில் சக்கரங்கள் கலன்று காரின் மீது மோது விடுமோ என்று பயமாக உள்ளது. தமிழக அரசு நிர்வாகம் மோசமாக உள்ளது. விரைவில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்படும் என்பதில் எந்த ஐயமும் இல்லை” என்றுத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

h raja press meet


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->