9 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய அமேசான் நிறுவனம் முடிவு.! - Seithipunal
Seithipunal


கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏற்பட்ட கொரோனாத் தொற்று, ரஷ்யா உக்ரைன் போர் உள்ளிட்ட காரணங்களினால் உலக நாடுகள் கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகின்றது. 

இதன் காரணமாக பன்னாட்டு நிறுவனங்களான டுவிட்டர், முகநூல், அமேசான் உள்ளிட்டவை ஆயிரக்கணக்கான ஊழியர்களை தொடர்ந்து பணிநீக்கம் செய்து வருகின்றன. இதில் முதலாவதாக எலான் மஸ்க் ட்விட்டரை தன்வசப்படுத்திய பிறகு ஊழியர்களை பணிநீக்கம் செய்தார்.

இதைத் தொடர்ந்து பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசானும் கடந்த ஜனவரி மாதம் 18 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்து இருந்தது. அதன் பிறகு மேலும் ஒன்பதாயிரம் ஊழியர்களை அடுத்த சில வாரங்களில் பணிநீக்க செய்வதற்கு அமேசான் நிறுவனம் முடிவு செய்துள்ளது. 

இந்த தகவலை அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆண்டி ஜாசி, ஊழியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். இந்த திடீர் பணிநீக்க நடவடிக்கை அமேசான் ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nine thousand employees layof amazon decided


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->