அஜித்தின் "விடாமுயற்சி" படத்தின் புதிய மேக்கிங் வீடியோ வெளியீடு..!
Vidamuyarchi New making video released
நடிகர் அஜித், துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் நடித்துள்ளார். மகிழ் திருமேனி இயக்கிய இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
அஜித்துடன் இணைந்து அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
இந்தப் படம் சுமார் 800-க்கும் அதிகமான திரையரங்குகளில் வருகிற 06-ஆம் தேதி தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் மொழிகளில் வெளியாக உள்ளது.
இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. அதனை தொடர்ந்து 'சவதீகா மற்றும் பத்திக்கிச்சு' என்ற இரண்டு பாடல்கள் வெளியாகி இணையத்தில் வைரலானது.
இதில் சவதீகா பாடல் யூடியூப் தளத்தில் தற்போது வரை 02 கோடி பார்வைகளை கடந்துள்ளது. இப்பாடலை அனிருத் மற்றும் அந்தோணிதாசன் இணைந்து பாடியுள்ளனர்.
இந்த நிலையில் தற்போது "விடாமுயற்சி" படத்தின் புதிய மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. மேக்கிங் வீடியோவில் அஜித் மற்றும் ஆரவ்க்கு நடந்த விபத்து காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
https://www.youtube.com/watch?v=EpHdFZHYjcg&feature=youtu.be
English Summary
Vidamuyarchi New making video released