நடிகர் நாசரின் மனநெகிழ்ச்சியான பகிர்வு – கோமாவில் இருந்த மகன் ஃபைசல் குறித்து அதிர்ச்சி தகவல்!
Actor Nasser compassionate sharing Shocking information about his son Faisal who was in a coma
தமிழ் திரையுலகில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் பின்னணி குரல் கொடுப்பவர் என பன்முக திறமை கொண்ட நாசர், தொடர்ந்து தனது நடிப்பால் ரசிகர்களை ஈர்த்துவருகிறார். கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக சிறந்த நடிகராக பாராட்டுகளை பெற்று வரும் நாசர், தற்போதைய ‘தக் லைஃப்’ மற்றும் சூர்யாவின் ‘ரெட்ரோ’ போன்ற படங்களில் பிஸியாக நடித்துவருகிறார்.
மகனைப் பற்றிய நாசரின் உணர்ச்சிப் பகிர்வு:
சமீபத்தில் நடிகர் நாசர், தனது மகன் ஃபைசலை பற்றிய ஒரு உணர்ச்சிகரமான தகவலை பகிர்ந்துள்ளார். விபத்தில் சிக்கிய ஃபைசல் 14 நாட்கள் கோமாவில் இருந்ததாகவும், அப்போது நடிகர் விஜய்யின் பெயரை மட்டும் நினைவு கூர்ந்ததாக கூறியுள்ளார்.
மகனை குணப்படுத்த விஜயின் புகைப்படங்கள், வீடியோக்களை காண்பித்தனர்
விஜய் இதை அறிந்து, நேரில் வந்து பார்க்க, அது ஃபைசலின் உடல்நிலையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.
நாசர் இதை நினைவு கூறும்போது மிகவும் நெகிழ்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ளார்.
தன்னுடைய திரைப்பயணம் குறித்து பேசிய நாசர், சினிமா ஒருபுறம் மகிழ்ச்சியையும் மறுபுறம் மன அழுத்தத்தையும் தரும் என கூறியுள்ளார். இருப்பினும், தன்னுடைய கதாபாத்திரங்களை சிறப்பாகவே வழங்கவேண்டும் என்பதே தனக்கு முக்கியம் என தெரிவித்துள்ளார்.
"நான் இஸ்ரோ விஞ்ஞானியை விட அதிகமாக சம்பாதிக்கிறேன், அதனால் எந்த கதாபாத்திரத்தையும் சிறப்பாகவே கொடுக்க விரும்புகிறேன்.""நான் சினிமாவை நேசிப்பதைவிட, அதை சிறப்பாக செய்வதையே விரும்புகிறேன்!
நாசரின் இந்த உணர்ச்சிப் பகிர்வு மற்றும் அவரது திரைப்பயணத்தின் சுய விமர்சனம், திரையுலகிலும் ரசிகர்கள் மத்திலும் பெரும் கவனம் பெற்றுள்ளது. 🎬🔥
English Summary
Actor Nasser compassionate sharing Shocking information about his son Faisal who was in a coma