கிடுகிடுவென உயர்ந்த எண்ணெய் விலை - அதிர்ச்சியில் பொதுமக்கள்.!
oil price increase in tamilnadu
தமிழகத்தில் சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணை போன்றவை லிட்டருக்கு ரூ.30 வரை உயர்ந்துள்ளது. கடைகளில் எண்ணெய் விலையைக் கேட்டுப் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த விலை உயர்வு குறித்து மளிகை கடை வியாபாரிகள் தெரிவித்துள்ளதாவது:- "எல்லா எண்ணெய் வகைகளின் விலையும் 3 நாட்களில் உயர்ந்துவிட்டன. மத்திய அரசின் இறக்குமதி வரி உயர்வால் விலை உயர்ந்துள்ளது.
தற்போது பண்டிகை காலம் என்பதால் மக்களிடையே எண்ணெய் பயன்பாடு அதிகரித்துள்ளது. ஓட்டல்களில், இனிப்பு, காரம் தயாரிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் பாமாயில் விலை உயர்வு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது" என்றுத் தெரிவித்துள்ளனர்.
மேலும், விலை உயர்வு குறித்து சென்னையில் உள்ள எண்ணெய் உற்பத்தி நிறுவனம் தரப்பு தெரிவித்துள்ளதாவது:- "இறக்குமதி வரியின் காரணமாக அனைத்து எண்ணெய் வகைகளும் உயந்துள்ளன. பாமாயில் விலை 10 பாக்கெட்டுகள் கொண்ட பெட்டிக்கு ரூ.100 உயர்ந்தது.
தீப எண்ணெய் பெட்டி ரூ.1035-ல் இருந்து ரூ.1230 ஆக உயர்ந்தது. அதேபோல், கடலைப் பருப்பு விலை கிலோவிற்கு 15 ரூபாய் உயர்ந்துள்ளது. அதாவது ரூ.90-க்கு விற்க கடலைப் பருப்பு தற்போது ரூ.105 ஆக உயர்ந்துள்ளது" என்றுத் தெரிவித்துள்ளன.
English Summary
oil price increase in tamilnadu