76-வது இந்திய ராணுவம்: பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!
75th Indian Army Day PM Modi Wish
76-வது இந்திய ராணுவ நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், "ராணுவ நாளான இன்று நமது நாட்டின் பாதுகாப்பின் காவலராக விளங்கும் இந்திய ராணுவத்தின் அசைக்க முடியாத துணிச்சலுக்கு தலை வணங்குகிறேன்
ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான இந்தியர்களின் பாதுகாப்பினை உறுதி செய்த தைரியர் மிக்கவர்கள் செய்த தியாகங்களை நினைவு கூர்வோம்.
இந்திய ராணுவம் உறுதிப்பாடு, தொழில்முறை, அர்ப்பணிப்பு ஆகிய்வற்றை வெளிப்படுத்துகிறது. நமது எல்லைகளைப் பாதுகாப்பதோடு, இயற்கை பேரிடர்களில் மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை வழங்குவதில் இந்திய ராணுவம் முத்திரைப் பதித்துள்ளது” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதேபோல் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "இந்திய எல்லைகளை இரவும் பகலும் தங்கள் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் துணிச்சலுடன் பாதுகாக்கும் தைரியமிக்க ராணுவ வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு ராணுவ நாள் வாழ்த்துகள்.
ஒவ்வொரு இந்தியரும் உங்கள் அசாத்திய துணிச்சலுக்கும் தியாகத்துக்கும் வணக்கம். வாழ்க இந்தியா” என்று ராகுல்காந்தி தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.
English Summary
75th Indian Army Day PM Modi Wish