அதிரடியாக குறைந்த வெங்காயம் விலை - ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா?
onion price decrease
இந்தியாவில் அதிக தேவை, விளைச்சல் பாதிப்பு, விநியோகக் குறைபாடு உள்ளிட்ட காரணங்களால் வெங்காயம் விலை அடிக்கடி உயர்ந்துவிடுகிறது. அதிலும் இந்த பண்டிகை காலத்தில் வெங்காயம் விலை உயர்வு பொதுமக்களுக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்துவதாக உள்ளது.
இந்த நிலையில், வெங்காய விலை உயர்வுப் பிரச்சினைக்குத் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது, மத்திய அரசின் நுகர்வோர் விவகாரத் துறை இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட 1,600 மெட்ரிக் டன் வெங்காயம் விலை நிலைப்படுத்துதல் நிதியின் கீழ் ரயில் மூலம் அனுப்புவதாக அறிவித்தது.
முதன்முறையாக ரயில் ரேக்குகள் மூலம் அதிகமான அளவில் வெங்காயம் கொண்டு வரப்படுகிறது. இதே வெங்காயத்தை சாலை மார்க்கமாக கொண்டு வரும்போது 84 லட்சம் ரூபாய் செலவாகும் ஆனால் ரயில் மூலம் கொண்டு வரும்போது 70 லட்சம் ரூபாய் மட்டுமே செலவாகிறது.
இந்த வெங்காயத்தை மத்திய அரசு பொதுமக்களுக்கு குறைவான விலையில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில், ஒரு கிலோ வெங்காயத்தை 35 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.