அனல் பறக்கும் பட்ஜெட் - ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம்.!
New airport in rameshwaram minister thangam thennarasu info
அமைச்சர் தங்கம் தென்னரசு தமிழக சட்டசபையில் 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் ஏராளமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் சிலவற்றை காண்போம்.
* ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும்.
* மதுரை மற்றும் கடலூரில் காலணி தொழில் பூங்காவும், திருச்சியில் பொறியியல் தொழில் பூங்காவும் அமைக்கப்படும்.
* ஓசூரில் ரூ.400 கோடியில் டைடல் பார்க் அமைக்கப்படும். இங்கு அறிவுசார் தொழில்நுட்ப வழித்தடமும் அமைக்கப்படும்.
* தமிழ்நாட்டில் செமி கண்டெக்டர் இயக்கமும், கோவை மற்றும் பல்லடத்தில் செமி கண்டக்டர் தொழிற் பூங்காவும் அமைக்கப்படும்.
* நகர்ப்புற சாலை பணிகளுக்கு ரூ.3,750கோடியும், சென்னை மாநகராட்சியில் ரூ.486 கோடி மதிப்பீட்டில் சாலைகள் தரமும் உயர்த்தப்படும்.
* கோவை மற்றும் மதுரை சாலைகள் ரூ.330 கோடியில் மேம்படுத்தப்படும்.
* 10 லட்சம் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ. 2.5 லட்சம் கோடி கடன் உதவி வழங்கப்படும்.
* கலைஞர் கைவினை திட்டத்தில் 19,000 கைவினைக் கலைஞர்கள் பயன்பெறும் வகையில் 74 கோடி ரூபாய் மானிய நிதி ஒதுக்கீடு செய்யப்படும்" என்றுத் தெரிவித்தார்.
English Summary
New airport in rameshwaram minister thangam thennarasu info