சமமான குடிநீர் வழங்க நடவடிக்கை.. பட்ஜெட்டில் அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


சென்னையின் அனைத்து பகுதிகளுக்கும் சமமான நீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் இன்று காலை 9.30 மணிக்கு 2025-26-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது  நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கினார்.அப்போது அவர் கூறியதாவது:நாட்டிலேயே அதிக நகரமயமாக்கல் சவாலை தமிழ்நாடு சந்தித்துவருகிறது

இதற்கேற்ற, குடிநீர், சாலை, போக்குவரத்து உள்ளிட்ட வசதிகளை உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்கின்றன. எனினும் புதிய நகரங்கள் அமைக்கும் தேவை உள்ளது

சென்னைக்கு அருகே 2000 ஏக்கரில் புதிய நகரம் அமைக்கப்படும். நவீன வசதிகள் கொண்டதாக இந்நகரம் அமையும். சென்னையை புதிய நகருடன் இணைத்திட போக்குவரத்து, மெட்ரோ வழித்தட நீட்டிப்பு ஆகியவை மேற்கொள்ளப்படும்

சென்னையின் அனைத்து பகுதிகளுக்கும் சமமான நீர் வழங்க நடவடிக்கை.சமச்சீரான குடிநீர் விநியோகத்திற்காக முதன்மை சுற்றுக் குழாய் திட்டம்அரசு பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு வளர்ந்து வரும் துறைகளின் புதிய பிரிவுகள் ஏற்படுத்தப்படும்.

ரூ.50 கோடியில் அரசு பொறியியல் கல்லூரிகளில் திறன் மிகு மையங்கள் அமைக்கப்படும்.
ஊரகப் பகுதிகளில் பழுதடைந்த வீடுகளுக்குப் பதிலாக, புதிய வீடுகள் கட்டித்தரப்படும்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இளைஞர்களின் பணித்திறன் மேம்படுத்தப்படும்.
500 தமிழ் இலக்கியங்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படும்.ரூ.602 கோடியில் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்.

சமச்சீரான குடிநீர் விநியோகத்திற்காக ரூ.2423 கோடியில் முதன்மை சுற்றுக் குழாய் திட்டம்.
புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தென்காசி, தூத்துக்குடி, ஈரோடு, திருவள்ளூரில் கூட்டுக் குடிநீர் திட்டங்கள்.

பணிபுரியும் பெண்களின் வசதிக்காக மேலும் 10 இடங்களில் தோழி விடுதிகள் கட்டப்படும்.
மாவட்டம்தோறும் இவ்வகை விடுதிகள் அமைக்கும் இலக்கை நோக்கி அரசு செல்கிறது.
மூன்றாம் பாலினத்தவரின் சமூக மேம்பாட்டை உறுதி செய்ய, உயர்கல்வி செல்லும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு மாதம் ₹1000 வழங்கப்படும்.ஊர்க்காவல் படையில் மூன்றாம் பாலினத்தவர்களை இணைக்க நடவடிக்கை என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Steps to provide equitable drinking water. Budget announcement


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->