மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு மாநாட்டுக் குழுவின் தலைவராக அன்புமணி இராமதாஸ் நியமனம்
Mamallapuram Chiththirai Manadu PMK Anbumani Ramadoss
மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழா மாநாட்டுக் குழுவின் தலைவராக மருத்துவர் அன்புமணி இராமதாஸை நியமனம் செய்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்த அவரின் அந்த அறிவிப்பில், "சமூகநீதி, சமூக நல்லிணக்கம் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி வன்னியர் சங்கத்தின் சார்பில் மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழா மாநாடு வரும் மே 11-ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளை ஒருங்கிணைத்து மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்காக மாநாட்டுக்குழு தலைவராக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் நியமிக்கப்படுகிறார்" என்று மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இளைஞர்களை ஈர்க்கும் வகையில் மாநாட்டை நடத்தி பாட்டாளிகள் அரசியல் அதிகாரத்தை பெற்றிட அடித்தளமாக அமைந்திட மாநாடு வெற்றிகரமாக நடைபெற அனைத்து முன்னெடுப்புகளையும் பாமக மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Mamallapuram Chiththirai Manadu PMK Anbumani Ramadoss