தொடரும் கொடுமை!!! வாலிபர் கைது! மூன்றாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை...!
The cruelty continues that young man was arrested by third grade student was harassed
தஞ்சாவூர் மாவட்டம் அருகே உள்ள கிராமப்பகுதியை சோ்ந்த 3-ம் வகுப்பு படிக்கும் மாணவி பள்ளிக்கு செல்வதற்காக நின்று கொண்டிருந்தார். அப்போது பள்ளி மாணவி நின்றுகொண்டிருந்த இடத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்த சின்னசாமி என்பவரின் மகன் கண்ணன் என்பவர், மாணவியிடம் பள்ளியில் இறக்கி விடுவதாக கூறி அழைத்து சென்றுள்ளார்.

அதன்பிறகு பள்ளிக்கு செல்லாமல் அந்த பகுதியில் இருந்த காட்டுப்பகுதிக்கு மாணவியை அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து மாணவியின் பெற்றோர் வல்லம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதைத்தொடர்ந்து புகாரின்பேரில் கண்ணனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியாக தெரியவந்தது.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கண்ணனை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுபோன்ற புகார்களுக்கு 1098 என்ற அவசர எண்ணை அழைக்கவும்.
வழக்குப் பதிவு செய்ய 1800-102-7222 என்ற எண்ணை அழைக்கவும்.complaints@bba.org.இந்த இதன் மூலமாகவும் தங்களது புகார்களை தெரிவிக்கலாம்.
English Summary
The cruelty continues that young man was arrested by third grade student was harassed