ரத்தன் டாடா கனவு கார்! வாகன உலகில் புதிய புரட்சி செய்யும் நானோ கார்: அடையாளமே தெரியாமல் மாறிய Nano EV - Seithipunal
Seithipunal


ரத்தன் டாடாவின் கனவு திட்டமான Tata Nano, புதிய மின்சார பதிப்பில் (Nano EV 2025) விரைவில் அறிமுகமாகவுள்ளது. மலிவு விலையில் மின்சார வாகனங்களை வழங்கும் முயற்சியாக இதனை பார்க்கப்படுகிறது.

Nano EV 2025, பழைய Nano காரின் சாதாரண பேஸ்லிப்ட் (facelift) பதிப்பாக இல்லாமல், முழுமையாக மறுஉருவாக்கப்பட்ட மாடலாக உருவாகியுள்ளது. அழகிய ஏரோடைனமிக் வடிவமைப்பு, LED ஹெட்லைட்கள், புதிய டிஜிட்டல் டாஷ்போர்டு, சிறப்பான மின்சார மோட்டார், மற்றும் வேகமாக சார்ஜ் செய்யும் தொழில்நுட்பம் ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளன.

இதில் Lithium-ion பேட்டரி பேக் பொருத்தப்படுவதால், ஒரு முறை சார்ஜ் செய்தால் நீண்ட பயணங்களுக்கு ஏற்றது. மேலும், ரிமோட் வாகன அணுகல், ஸ்மார்ட்போன் இணைப்பு, OTA மென்பொருள் புதுப்பிப்பு, மற்றும் குரல் கட்டளைகள் போன்ற உயர்தர வசதிகளும் Nano EV-யில் கிடைக்கும்.

பாதுகாப்பு அம்சங்களை முன்னிலைப்படுத்தும் Tata, Nano EV 2025-ல் முழு ஏர் பேக்குகள், ABS, ESC, மற்றும் முக்கிய பாதுகாப்பு தொழில்நுட்பங்களை வழங்கியுள்ளது.

இந்த மின்சார கார், இந்தியாவில் மலிவு விலையில் மின்சார வாகனங்களுக்கான புதிய பாதையை உருவாக்கும் என்றும், Tata-வின் EV மார்க்கெட்டில் இடத்தை மேலும் பலப்படுத்தும் என்றும் வல்லுநர்கள் கருதுகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ratan Tata Dream Car A new revolutionary nano car in the automotive world the unrecognizable Nano EV


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->