2025-26ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கல்: எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு!
Union Budget 2025-26: Opposition MPs stage walkout
பட்ஜெட் உரையை நிர்மலா சீதாராமன் வாசிக்கத் தொடங்கியபோது, எதிர்க்கட்சி எம்.பி.க்கள்கடும் அமளியில் ஈடுபட்டனர்.அப்போது மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று கூறி கடும் அமளியில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று ஜனாதிபதி உரையுடன் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில் 2025-26ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
இதையடுத்து பட்ஜெட் உரையை நிர்மலா சீதாராமன் வாசிக்கத் தொடங்கியபோது, எதிர்க்கட்சி எம்.பி.க்கள்கடும் அமளியில் ஈடுபட்டனர்.அப்போது மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று கூறி கடும் அமளியில் ஈடுபட்டனர்.இதையடுத்து ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது இந்தப் பிரச்சினையை எழுப்பலாம் என்று அமளியில் ஈடுபட்ட எம்.பி.க்களிடம் சபாநாயகர் ஓம் பிர்லா கூறினார்.

இதற்கு சம்மதிக்காத அவர்கள் தொடர்ந்து இருப்பினும்அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது ,இதை பொருட்படுத்தாமல் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை தொடர்ந்தார். இதையடுத்து எதிர்க்கட்சி எம்.பிக்கள் வெளிநடப்பு செய்தனர். அதனை தொடந்து பின்னர் சிறிது நேரம் கழித்து மீண்டும் அவைக்கு திரும்பினர்.
English Summary
Union Budget 2025-26: Opposition MPs stage walkout