ராசிபுரத்தில் 3 கொள்ளையர்கள் கைது - 2 பேருக்கு கை, கால் முறிவு.!
three peoples arrested in namakkal rasipuram
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் அடுத்த முத்துக்காளிப்பட்டி ஶ்ரீராம் நகர் பகுதியை சேர்ந்த கோமதி என்ற பெண் வெண்ணந்தூர் பகுதியில் கூட்டுறவு சங்க ஊழியராக பணிபுரிந்து வருகிறார். முத்து காளிப்பட்டி பகுதியில் உள்ள இவரது வீட்டில் கடந்த மாதம் 20 ஆம் தேதி வீட்டின் பூட்டை உடைத்து 18 சவரன் தங்க நகை திருட்டுப் போனதாக ராசிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அதன் படி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். திருட்டு நடைபெற்ற வீட்டின் அருகே இருசக்கர வாகனத்தில் மூன்று நபர்கள் செல்வதை சிசிடிவி கேமரா மூலம் அறிந்த காவல்துறையினர் பல்வேறு பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், நேற்று இரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது 3 இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாகச் தப்பிththuச் சென்றுள்ளனர்.

உடனே போலீசார் அவர்களை பின் தொடர்ந்துச் சென்றபோது அவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். அதில், இருவருக்கு கை, கால் முறிவு ஏற்பட்டது. அவர்கள் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து போலீசார் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்ட போது சென்னையை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மகன் டேவிட்(எ)சுந்தர்ராஜ், செல்வம் மகன் மணி, வேலூர் பகுதியை சேர்ந்த தங்கவேலு மகன் மணிகண்டன் ஆகியோர் என்பது தெரியவந்தது. மூன்று பேரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த விசாரணையில் கடந்த மாதம் 20 முதல் 23 ஆம் தேதி வரை சேலம்,ராசிபுரம், நாமக்கல், புதுக்கோட்டை, மதுரை, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 3 நாள்களில் மட்டும் 25-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் இரு சக்கர வாகனங்களை திருடிச் சென்றது தெரியவந்தது. இருப்பினும் போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
three peoples arrested in namakkal rasipuram