மத்திய பட்ஜெட் - தன் தன்யா கிருஷி திட்டம் அறிமுகம்.! - Seithipunal
Seithipunal


நடப்பு (2025-26)-ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. எட்டாவது முறையாக நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் உரையில் கூறியிருப்பதாவது:-

உலக அளவில் வேகமாக வளரும் பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா உள்ளது. வளர்ந்த இந்தியா என்ற நிலையை அடைய தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மத்திய அரசு மேற்கொண்ட கட்டமைப்பு சீர்திருத்தங்கள் உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. 

அடுத்த 5 ஆண்டுகள் நமக்கான வரப்பிரசாதமாக மாறும். 'தன் தன்யா கிருஷி' என்கிற திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த உற்பத்தி திறன் கொண்ட 100 மாவட்டங்கள் இந்த திட்டத்தின் முக்கிய இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இளைஞர்கள் முன்னேற்றம், வறுமை ஒழிப்பு, உணவு உத்தரவாதம் உள்ளிட்ட10 அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

than thanya kirushi scheme intro in budget 2025


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->