அடித்தது ஜாக்பாட்.. வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியது எஸ்பிஐ.. எவ்வளவு தெரியுமா? - Seithipunal
Seithipunal


பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி முதலீடு செய்யப்படும் வைப்பு தொகைக்கான வட்டி விகிதங்களை 0.5 சதவீதம் உயர்த்தியுள்ளது. இது தொடர்பாக பாரத ஸ்டேட்  வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் "நிலை வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதங்கள் 0.5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளன. கடந்த டிசம்பர் 27ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள இந்த வட்டி விகித உயர்வு குறிப்பிட்ட காலம் கொண்ட வைப்பு நிதிகளுக்கு மட்டும் பொருந்தும்.


அதன்படி, இனி 180 முதல் 210 நாள்கள் வரையிலான வைப்பு நிதிகளுக்கு 5.75 சதவீதமாகவும், 7 முதல் 45 நாள்கள் வரையிலான வைப்பு நிதிகளுக்கு 3.5 சதவீதமாகவும் வட்டி விகிதம் இருக்கும். 211 நாள்களுக்கு மேல் ஒராண்டுக்குக் கீழ்  செய்யப்படும் வைப்பு நிதிகளுக்கு வட்டி விகிதம் 6 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. 3 ஆண்டுகளுக்கும் மேலான வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதம் 6.75 சதவீதமாக இருக்கும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SBI Raises Interest Rate on Deposit Fund


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->