ஒரே நாளில் ரூ. 84 அதிகரித்த பெட்ரோல் விலை.. அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்.!! - Seithipunal
Seithipunal


இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், கடும் இன்னலை மக்கள் சந்தித்து வருகின்றனர். உணவு பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெட்ரோல் நிலையங்களில் மணி கணக்கில் நின்று வாகன ஓட்டிகள் பெட்ரோல் நிரப்பி செல்கின்றனர். 

கொழும்பு நகரில் தினமும் 13 மணி நேரம் வரை மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது. மற்ற நகரங்களில் தினமும் 10 மணி நேரம் மின்வெட்டு அமல்படுத்தப் படுவதால் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர்.  இதனால் பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா செய்தது. இலங்கையில் பிரதமர் மகிந்த ராஜபக்ச தவிர அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்தனர். இதையடுத்து, அனைத்துக் கட்சி அமைச்சரவை அமைக்க அதிபர் கோத்தபய ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில், இலங்கையில் மீண்டும் அதிகரித்த பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் விலை ரூ.84  அதிகரித்து ரூ.338 ஆக விற்பனை செய்யப்படுகிறது. ஒக்டேன் 95 ரக பெட்ரோலின் விலை ரூ.90 அதிகரித்து ரூ.373 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 

ஒட்டோ டீசல் ரூ.113 அதிகரித்து ரூ.289 ஆக விற்பனை  செய்யப்படுகிறது.  சுப்பர் டீசல் ரூ.75 அதிகரித்து ரூ.329 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் சிரமத்தில் உள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

srilanka petrol price hike


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->