வெளியானது கங்குவா படத்தின் புதிய போஸ்டர்.! - Seithipunal
Seithipunal


பிரபல இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைபடம் 'கங்குவா'. ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கும் இந்தப் படம் 38 மொழிகளில் 3டி முறையில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் டிரைலர் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தத் திரைப்படம் வரும் நவம்பர் மாதம் 14-ந் தேதி வெளியாகவுள்ளது. 

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் 26 ஆம் தேதி சென்னையில் நடைப்பெறவுள்ளது. வட இந்தியாவில் 3500 மேற்பட்ட திரையரங்குகளில் கங்குவா திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் முதல் பாடலான ஃபயர் சாங் மிகப்பெரியளவில் வரவேற்பை பெற்றது.

கங்குவா திரைப்படத்தின் இரண்டாம் பாடலான YOLO என்ற பாடல் நாளை வெளியாகவுள்ளது என்று படக்குழு புது போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அந்தப் போஸ்டரில், படக்குழு சூர்யாவின் புது தோற்றமுடைய ஃப்ரான்சிஸ் கதாப்பாத்திரத்தின் படத்தை பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kanguva movie team published new poster


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->