வேட்டையன் வெற்றி - படக்குழுவினருக்கு அசைவ விருந்து..! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் சூப்பர் ஸ்டாருமான ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி கடந்த 10-ந் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'வேட்டையன்'. இயக்குனர் ஞானவேல் இயக்கியுள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். 

மேலும், இந்தப் பகத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கல்வி முறையில் உள்ள ஓட்டைகள் குறித்தும் போலி என்கவுன்டர் குறித்தும் பேசும் இப்படம் தமிழ்நாடு மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களிலும் வெளியாகி வசூல் சாதனை படைத்து வருகிறது. 

இந்த நிலையில், இந்தப் படத்தின் மிகப்பெயரிய வெற்றியை தொடர்ந்து வேட்டையன் படக்குழு படத்திற்கு ஆதரவளித்து இந்தப் பயணத்தில் பயணம் செய்த அனைவருக்கும் தங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கும் விதமாக, படக்குழுவினர் அனைவருக்கும் அசைவ விருந்து வழங்கியது. அந்த விருந்தில் இயக்குனர் ஞானவேல் மற்றும் நடிகை ரித்திகா சிங் அங்கிருந்தவர்களுக்கு தங்களின் கைகளால் உணவு பரிமாறி மகிழ்ந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

non veg feast to vettaiyan movie team


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->