பெண்களுக்கான சூப்பர் திட்டம்.. மாதம் ரூ.1300 வட்டி.. வரி விலக்கும் உண்டு..! - Seithipunal
Seithipunal


மத்திய அரசின் பட்ஜெட் கூட்டத் தொடரின் பொழுது மகிலா சம்மான் சேமிப்பு பத்திரம் பெண்களுக்காக அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வட்டிக்கு வரி பிடித்தம் கிடையாது என நிதி அமைச்சகம் தெரிவித்திருந்த நிலையில் மத்திய நேரடி வரி வாரியம் அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

தபால் நிலையத்தில் மகிலா சம்மாள் கணக்கை பெண்கள், பெண் குழந்தைகளின் பெயரிலும் சேமிப்பு பாத்திரத்தில் பணம் செலுத்தலாம். இந்த திட்டம் 2025 மார்ச் 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும். இந்த தேதிக்குள் பெண்கள் முதலீடு செய்யலாம். குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாயிலிருந்து அதிகபட்சம் 2 லட்சம் ரூபாய் வரை இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

ஆண்டுக்கு 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. அதன்படி அதிகபட்சமாக 2 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்தால் ஆண்டுக்கு ரூ.16,000 வட்டி கிடைக்கும். அதாவது மாதம் 1300 ரூபாய் வட்டி வழங்கப்படுகிறது. மகிலா சம்மான் சேமிப்பு பத்திரம் மூலம் பெறும் வட்டிக்கு வரி பிடித்தம் கிடையாது என நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. ஒரு நிதியாண்டில் பெரும் வட்டி 40 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக இருப்பதால் டிடிஎஸ் பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tax exemption on interest on Mahila Samman Savings Scheme


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->