இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்... மீண்டும் குறைந்த தங்கம் விலை! இன்றைய நிலவரம்.!
Today gold price
தங்கம் விலை கடந்த மார்ச் மாதத்தில் இருந்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஏழை, எளிய மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் தங்கத்தின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 குறைந்த விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. அதாவது சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 120 குறைந்து ரூ. 52,800 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை கிராமுக்கு ரூ. 15 குறைந்து ரூ. 6600 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை ரூ. 50 காசுகள் குறைந்து ரூ. 86.50க்கும் ஒரு கிலோ ரூ. 86 ஆயிரத்து 500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.