யமஹா FZ-15 - பெட்ரோல், எத்தனால் மூலம் இயக்கலாம்.! - Seithipunal
Seithipunal


யமஹா நிறுவனம் 2023 FZ-15 மோட்டார்சைக்கிளை பிரேசில் நாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் புதிய FZ-15 மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் முன்புறம் மேம்பட்ட ஹெட்லேம்ப் செட்டப் வழங்கப்பட்டுள்ளது. இது தற்போது இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் FZ-25 போன்றே காட்சியளிக்கிறது. இந்த மோட்டார்சைக்கிளின் மற்ற அம்சங்கள் முழுக்க FZ-V 3 போன்றே வழங்கப்பட்டுள்ளது. 

இந்த புதிய மோட்டார்சைக்கிள் மாடல் இந்திய சந்தையில் அறிமுகமாகும் பட்சத்தில் பஜாஜ் பல்சர் N160, டிவிஎஸ் அபாச்சி RTR 160 4V மற்றும் சுசுகி ஜிக்சர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது.

இதன் சிறப்பு அம்சங்கள்:

• 2023 FZ-15 மாடலில் பிரானி பியூவல் டேன்க் மற்றும் ஃபாக்ஸ் ஏர் வெண்ட்கள் வழங்கப்பட்டுள்ளது.

• இத்துடன், சிறிய டெயில் லேம்ப் மற்றும் ஸ்டபி எக்சாஸ்ட் வழங்கப்பட்டுள்ளது. 

• மேலும், பைரெலி டையப்லோ ரோசோ 2 டயர்கள் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்பட்டுள்ளது. 

• இந்த மோட்டார்சைக்கிள் 11.9 லிட்டர் பியூவல் டேன்க் கொண்டிருக்கிறது. 

• இத்துடன் அதிகளவு கிரவுண்ட் கிளியரன்ஸ் வழங்கப்பட்டுள்ளது. 

• இந்த மாடலில் 149சிசி என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

• இந்த என்ஜின் பெட்ரோல் மட்டுமின்றி எத்தனால் மூலமும் இயங்கும். 

• FZ-V3 மாடலில் உள்ள என்ஜின் 12.4 ஹெச்பி பவர், 13.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டது 

• இந்த பைக்கின் இருபுறங்களிலும் 17 இன்ச் வீல்கள் வழங்கப்பட்டுள்ளது. 

• இந்த புதிய மாடல், ரேசிங் புளூ, மிட்நைட் பிளாக் மற்றும் மேக்மா ரெட் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Yamaha FZ15 Can run on Petrol Ethanol


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->