பஹல்காம் தாக்குதல் காரணமாக பிசிசிஐ அறிவித்த முக்கிய அறிவிப்பு என்ன தெரியுமா?
important announcement made by BCCI due Pahalgam attack
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

பி.சி.சி.ஐ:
இது தொடர்பாக பி.சி.சி.ஐ. துணை தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவிக்கையில், "இனி வரும் நாட்களிலும் இருதரப்பு போட்டிகளில் பாகிஸ்தானுடன் கண்டிப்பாக விளையாட மாட்டோம்.
பாதிக்கப்பட்டவர்களுடன் நாங்கள் இருக்கிறோம். எங்கள் அரசாங்கம் என்ன சொன்னாலும், நாங்கள் செய்வோம். அரசாங்கத்தின் நிலைப்பாடு காரணமாக இருதரப்பு போட்டிகளில் பாகிஸ்தானுடன் விளையாடுவதில்லை.
இனி வரும் காலங்களிலும் இருதரப்பு போட்டிகளில் பாகிஸ்தானுடன் விளையாட மாட்டோம். ஆனால் ஐ.சி.சி. போட்டிகளை பொறுத்தவரை, ஐசிசி வற்புறுத்தலின் காரணமாக நாங்கள் விளையாடுகிறோம்" என்று தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி, ஐ.சி.சி. தொடர்களில் இந்தியாவையும் பாகிஸ்தானையும் ஒரே குழுவில் சேர்க்க வேண்டாம் என ஐ.சி.சி.-க்கு பி.சி.சி.ஐ. கடிதம் எழுதியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
important announcement made by BCCI due Pahalgam attack