பைக் வாங்க சித்தி வீட்டில் கொள்ளை அடித்த அக்கா மகன்!
Young man stole jewelry passion for bike Parents shocked
திண்டிவனம் அருகே புதிய பைக் வாங்குவதற்காக 25 சவரன் நகையைத் திருடிய இளைஞர் இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டிவனம் அருகே உள்ள நடுவணந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் கலைச்செல்வி. இவரது வீட்டில் சில தினங்களுக்கு முன்பாக 25 சவரன் நகைகள் காணாமல் போனதை அடுத்து, திண்டிவனம் காவல் நிலையத்தில் கலைச்செல்வி புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் மணிகண்டன் என்ற இளைஞர் நகைகளைத் திருடியதாக தெரியவந்தது.

கலைச்செல்வியின் அக்கா மகனான மணிகண்டன் நகைகளைத் திருடிய சம்பவம், பெற்றோருக்கு இடியாய் வந்து விழுந்தது.
இதுகுறித்து மணிகண்டனிடம் விசாரணை மேற்கொண்டதில் பெற்றோரின் கடனை அடைப்பதற்கும், புதிய பைக்கை வாங்குவதற்கும் சித்தியின் நகைகளைத் திருடினேன் என்று ஒப்புக்கொண்டான்.
இதனை அடுத்து மணிகண்டனைக் கைது செய்த போலீசார் மேலும் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சொந்த வீட்டிலேயே பைக் வாங்குவதற்காக நகைகளைத் திருடிய இளைஞர்க் குறித்த செய்தி, அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Young man stole jewelry passion for bike Parents shocked