ஆதிபுருஷ் திரைப்படத்திற்கு 10,000 இலவச டிக்கெட்டுகள் - தி காஷ்மீர் பைல்ஸ் பட தயாரிப்பாளர் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ஆதிபுருஷ்’. இந்த படம் ராமாயணத்தின் ஒரு பகுதியை மையமாக வைத்து உருவாகி வருகிறது. இப்படத்தில் நடிகர் பிரபாஸ் ராமர் கதாபாத்திரத்திலும், கீர்த்தி சனோன் சீதையாகவும், சையிப் அலிகான் ராவணனாகவும் நடிக்கின்றனர்.

3டியில் உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில், வரும் ஜூன் 16ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதனையடுத்து ஆதிபுருஷ் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் திரையரங்கின் ஒரு இருக்கையை ஆஞ்சநேயருக்காக விடப்போவதாகவும் அந்த டிக்கெட் விற்கப்படாது எனவும் படக்குழு நூதன அறிவிப்பை வெளியிட்டது.

இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் அரசு பள்ளிகள் மற்றும் ஆதரவற்றோர், முதியோர் இல்லங்களில் ஆதிபுருஷ் பட டிக்கெட்டுகள் இலவசமாக வழங்கப்பட உள்ளதாக தி காஷ்மீரின் பைல்ஸ் பட தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். ராமரின் மீது கொண்ட பக்தியின் காரணமாக 10,000 அதிகமான டிக்கெட்டுகளை இலவசமாக வழங்கியுள்ளதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

10000 free tickets Adiprush movie give The Kerala story movie producer


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->