சிறைக்கைதிகள் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை; மத்திய அரசு அறிவுறுத்தல்..! - Seithipunal
Seithipunal


மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படாத குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட விசாரணைக் கைதிகள், அந்தக் குற்றத்திற்காக குறிப்பிடப்பட்டுள்ள அதிகபட்ச சிறைத் தண்டனையில் பாதியை ஏற்கனவே அனுபவித்திருந்தால், அவரை விடுவிக்க வேண்டும் என்பதை அனைத்து மாநிலங்களும் உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. 

இதனால் சிறைகளில் கைதிகளின் கூட்ட நெரிசல் குறையும் எனத் தெரிவித்துள்ளது.

இதனை அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் சிறைச்சாலை இயக்குநர் ஜெனரல்களுக்கு அனுப்பிய கடிதத்தில், பாரதீய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா தெரிவித்துள்ளார்.

2023 (BNSS) இன் பிரிவு 479-ன் விதிகளின் கீழ், அத்தகைய தகுதியுள்ள கைதிகளை விடுவிக்க சிறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், BNSS-ன் பிரிவு 479, ஒரு நபர் எந்தவொரு சட்டத்தின் கீழும் ஒரு குற்றத்தின் விசாரணை அல்லது விசாரணையின் போது (அந்தச் சட்டத்தின் கீழ் மரணதண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குற்றமாக அல்லது குறிப்பிடப்படாத குற்றமாக இருக்கும் பட்சததில்) அந்தக் குற்றத்திற்காகக் குறிப்பிடப்பட்ட அதிகபட்ச சிறைத்தண்டனைக் காலத்தில் பாதி காலம் வரை காவலில் வைக்கப்பட்டிருந்தால், அவர் நீதிமன்றத்தால் ஜாமினில் விடுவிக்கப்படுவார் என்று கூறுகிறது.

அதனடிப்படையில், முதல் முறை குற்றவாளிகள் விஷயத்தில், அந்த குற்றத்திற்காக விதிக்கப்பட்ட அதிகபட்ச சிறைத்தண்டனைக் காலத்தில் மூன்றில் ஒரு பங்கு வரை காவலில் இருந்திருந்தால், அத்தகைய கைதிகள் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டிள்ளது.

மேலும், BNSS-ன் பிரிவு 479 (3) மேற்கூறிய விசாரணைக் கைதிகளை ஜாமினில்/பிணையில் விடுவிப்பதற்காக சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்ய சிறை கண்காணிப்பாளருக்கு ஒரு குறிப்பிட்ட பொறுப்பை வழங்குகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக அக்டோபர் 16, 2024 அன்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒரு ஆலோசனையை வெளியிட்டதாகவும் கூறப்பட்டுகிறது.

தகுதியுள்ள அனைத்து கைதிகளுக்கும் BNSS-ன் பிரிவு 479-இன் விதிகளின் பலனை வழங்கவும், அதன்படி அவர்களின் விதிகளின் பலனை வழங்கவும், அதன்படி அவர்களின் ஜாமின் விண்ணப்பங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் கேட்டுக் கொண்டதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Steps to reduce the number of prisoners Central government instructs


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->