விசாரணைக்கு ஆஜராகாத காவல் ஆய்வாளருக்கு பிடிவாரண்ட் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி அருகே மொடச்சூர் சங்கரன் வீதி பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த நாராயணபுரம் கல்லம்பாளையத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில் சங்கர் கடந்த 7.3.2021 அன்று குலதெய்வம் கோவில் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றார்.

அப்போது, சங்கருக்கும் அதே பகுதியை சேர்ந்த அவருடைய உறவினர் முருகன் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து சங்கர் அன்று இரவு வீட்டின் முன்பு உட்கார்ந்து இருந்தபோது அங்கு வந்த முருகனும், அதே பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் என்பவரும் சங்கரை தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பான வழக்கு கோபி மூன்றாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக அப்போதைய கோபி போலீஸ் காவல் ஆய்வாளர் சோமசுந்தரம் இருந்தார். இவர் தற்போது திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உள்ள போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். 

இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை நேற்று நீதிமன்றத்தில் நடைபெற்றபோது சோமசுந்தரம் விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து காவல் ஆய்வாளர் சோமசுந்தரத்துக்கு, பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி தயாநிதி உத்தரவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

court order arrest warrant to not appeal police inspector in murder case


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->