கிராபிக்ஸ் காட்சிகளுக்கு மட்டும் ரூ.200 கோடி செலவு! அதிரவைக்கும் பட்ஜெட்.!
200 crores spent only graphics scene in kalki 2898 ad
கிராபிக்ஸ் காட்சிகளுக்கு மட்டும் ரூ.200 கோடி செலவு! அதிரவைக்கும் பட்ஜெட்.!
பிரபாஸ், அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோனே என்று ஏராளமான இந்திய நட்சத்திரங்கள் பலர் ஒன்றினையும் படம் ‘கல்கி 2898 ஏடி’. அறிவியல் புனைக்கதையாக உருவாகி வரும் ஆதிபுருஷ் படத்தில் இருந்து வெளியான நடிகர் பிரபாஸின் முதல் தோற்றம் ரசிகர்களின் கேலிக்கு உள்ளானது.
அதாவது, கிராஃபிக்ஸ் பணிகள் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே இவ்வளவு சுமாராக இருப்பதாக பலரும் தங்களுடைய கருத்துக்களைத் தெரிவித்தனர். இதனால், 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் ‘கல்கி 2898 ஏடி’ படத்தில் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு மட்டும் ரூ.200 கோடியை படக்குழு செலவிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாத தரத்துடன் இந்தப் படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் இருக்க வேண்டும் என்பதில் படக்குழு தீர்மானமாக உள்ளது. நடிகர் பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’ திரைப்படம் அதன் கிராபிக்ஸ் காட்சிகளுக்காக விமர்சிக்கப்பட்டது.
அதனால், படக்குழு மேலும் ரூ.100 கோடி செலவு செய்து படத்தின் கிராபிக்ஸ் தரத்தை மேம்படுத்தியது. இருப்பினும், பெரிய திரையில் அது மோசமானதாகவே அமைந்து படம் படுதோல்வியைத் தழுவியது.
இதன் காரணமாக ’கல்கி 2898ஏடி’ படக்குழு ஆரம்பத்திலேயே அதிக தொகையை செலவழித்து தரமான கிராபிக்ஸ் காட்சிகளை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
English Summary
200 crores spent only graphics scene in kalki 2898 ad