அமெரிக்கா புறபடுவதற்கு முன் உலகளாவிய விவகாரம், பயங்கரவாதம் குறித்து மோடி மற்றும் மேக்ரான் கலந்துரையாடல்..!
Modi and Macron discuss global issues and terrorism before leaving for US
இந்திய பிரதமர் மோடி பிரான்சில் இருந்து அமெரிக்காவுக்கு புறப்பட்டுள்ளார். அவர் பிரான்ஸ் சுற்றுப் பயணத்தில் அங்கு நேற்று நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார். அத்துடன், இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
பிரான்ஸ் மார்செய்ல்ஸில் அமைக்கப்பட்டுள்ள இந்திய துணை தூதரகத்தை பிரதமர் மோடியும், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானும் இணைந்து திறந்து வைத்தனர்.
அதன் பின்னர் மஸார்குஸில் உள்ள இந்திய ராணுவ வீரர்களின் நினைவிடத்தில் பிரதமர் மோடியும், இமானுவேல் மேக்ரானும் இணைந்து மரியாதை செலுத்தினர்.அதனை தொடர்ந்து பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் மற்றும் இந்திய பிரதமர் மோடி இருவரும் இருநாடு தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர்.

இந்த பேச்சுவார்த்தையின் போது மூலோபாய கூட்டாண்மை, உலகளாவிய விவகாரம் மற்றும் பயங்கரவாதம் தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தினர். இதன்போது இருதரப்பு ஒத்துழைப்பு வளர்ச்சி குறித்து இரு தலைவர்களும பாராட்டு தெரிவித்தோடு, இருதரப்பு ஒத்துழைப்பு மேலும் வலுப்படுத்தவும் உறுதி பூண்டனர்.
இந்நிலையில், பிரதமர் மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் சந்திப்புக்குப் பின் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில் "இந்தோ-பசிபிக், ரஷியா- உக்ரைன் போர் உள்ளிட்ட பல சிக்கலான விசயங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.

பாதுகாப்பு, அணு எரிசக்தி, விண்வெளித்துறை ஆகியவற்றில் இருநாட்டின் மூலோபாய கூட்டாண்மை மற்றும் ஒத்துழைப்பு குறித்து விவாதித்தனர்.தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு துறையில் இணைந்து செயல்படுவது குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.
இந்த பேச்சுவார்த்தை இந்தியா- பிரான்ஸ் மூலோபாய கூட்டாண்மையின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியதாக இருந்தது. வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை மேம்படுத்தவும் தலைவர்கள் அழைப்பு விடுத்தனர்.
மேலும் இது தொடர்பாக 14-வது இந்தியா- பிரான்ஸ் தலைமை நிர்வாக அதிகாரிகள் கூட்டத்தின் அறிக்கையை வரவேற்றனர்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
English Summary
Modi and Macron discuss global issues and terrorism before leaving for US