கஞ்சா கருப்புக்கு மிரட்டல்! நீங்க அமைச்சரா? ரவுடியா? பாஜக கடும் கண்டனம்!
TN BJP Condemn to DMK Minister Ma Subramaniyan KanjaKaruppu
தமிழ்நாடு பாஜக விடுத்துள்ள அறிக்கையில், "சென்னை போரூர் அரசு மருத்துவமனையில் சரியான நேரத்திற்கு மருத்துவர்கள் பணிக்கு வருவதில்லை என்பதையும், அதனால் நோயாளிகள் பெருமளவு பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும் ஆதாரத்துடன் சுட்டிக்காட்டியவர்களை பொதுவெளியில் பகிரங்கமாக மிரட்டும் உங்களது ஆணவப் பேச்சு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது அமைச்சரே.
அந்தக் குறிப்பிட்ட நடிகர் நாடகமாடுகிறார் என்று கூறும் நீங்கள், காலை முதல் பல மணி நேரம் காத்திருக்கிறோம் ஆனால் எந்த மருத்துவர்களும் இன்னும் வரவில்லை எனக் கொந்தளிக்கும் பொதுமக்களுக்கு என்ன பதில் வைத்துள்ளீர்கள்? அவர்களும் பொய் கூறுகிறார்கள் என்று பழி சுமத்துவீர்களா?
அங்கு அனைத்து மருத்துவர்களும் பணியில் இருந்தது உண்மையெனில், மருத்துவர் எங்கே என்ற பொதுமக்களின் கேள்விகளுக்கு அந்த மருத்துவமனையின் அட்மின் அலுவலர் எதற்கு திக்கித் திணறி அமைதி காக்க வேண்டும்?
"மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் மகத்தான மருத்துவமனை" என்று வீர வசனம் பேசும் நீங்கள், தமிழகத்தில் எத்தனை அரசு மருத்துவமனைகள் அனைத்து வசதிகளுடனும் மருத்துவர்களுடனும் தரமாக இயங்கிவருகிறது என்ற தரவுகளை வெளியிட முடியுமா?
இன்றும் தமிழகத்தில் பல அரசு மருத்துவமனைகளில் குடிநீர் முதலிய பல அடிப்படை வசதிகள் இல்லை என்பதையும், பல வார்டுகளின் மேற்கூரைகள் ஒழுகுவதையும், பல மருத்துவமனையின் உள்நோயாளிகள் பிரிவுகளில் தெரு நாய்கள் உலாவுவதையும், டார்ச் வெளிச்சத்தில் சிகிச்சைகள் அளிக்கப்படுவதையும் நீங்கள் மறந்துவிட்டீர்களா?
இதுபோன்ற உங்கள் நிர்வாகத் தவறுகளை நாங்கள் விடாது கிளறிக் கொண்டே தான் இருப்போம், என்ன செய்வீர்கள் அமைச்சரே? உங்கள் திமுக குண்டர்களைக் கொண்டு கொலை மிரட்டல் விடுவீர்களா? அல்லது போலி வழக்குகளைப் போட்டு எங்கள் குரல்வளையை நெரித்துவிடுவீர்களா? என்ன செய்வீர்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளது.
English Summary
TN BJP Condemn to DMK Minister Ma Subramaniyan KanjaKaruppu