2024: இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் Top 10 நடிகர்கள் பட்டியல் வெளியீடு! - Seithipunal
Seithipunal


2024-ம் ஆண்டில் இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் முதல் டாப் 10 நடிகர்களின் பட்டியலை  ஃபோர்ப்ஸ் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதில், இந்தியாவில் இன்றளவும் இளமையாகவும், தனது நடிப்பால் அனைவரையும் கட்டி ஈர்த்த நடிகர் ஷாருக்கான்  முதல் இடத்தில் உள்ளார். இவர் ஒரு படத்திற்கு ரூ150 முதல் ரூ.250 கோடிகள் வரை சம்பளம் வாங்கும் நிலையில், கடைசியாக இவர் அதிகபட்ச சம்பளம் வாங்கிய திரைப்படம் துங்கா.

2 வது இடத்தில் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினி ஒரு படத்திற்கு ரூ.115 முதல் ரூ.270  கோடிகள் வரை சம்பளம் வாங்கும் நடிகராக உள்ளார். இவர் இறுதியாக அதிகபட்ச சம்பளம் வாங்கிய திரைப்படம் ஜெயிலர். நடிகர் விஜய் ஒரு படத்திற்கு ரூ.130 முதல் ரூ.250 கோடிகள் வரை சம்பளம் வாங்கும் நடிகராக 3 வது இடத்தில் உள்ளார்.

4வது இடத்தில் நடிகர் அமீர் கான் ரூ.100 முதல் 275 கோடிகள் வரை சம்பளம் வாங்கும் நடிகராக உள்ள நிலையில், லால் சிங் பதா படத்திற்கு கடைசியாக அதிக சம்பளம் வாங்கினார்.

தொடர்ந்து 5 வது இடத்தில் நடிகர் பிரபாஸ் ஒரு படத்திற்கு ரூ.100 முதல் ரூ.200 கோடிகள் வாங்கும் நபராகவும், ரூ.105 முதல் 165 கோடிகள் வரை சம்பளம் வாங்கும் நடிகராக நடிகர் அஜித் 6வது இடத்தில் உள்ளார்.

7வது இடத்தில் நடிகர் சல்மான் கானும்,  7வது இடத்தில், நடிகர் கமல் ஹாசன் உள்ளார். 9வது இடத்தில் நடிகர் அல்லு அர்ஜீனும், 10வது இடத்தில் அக்சய் குமாரும் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2024 Top 10 Highest Paid Actors in India List Released


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->