தண்டவாளத்தில் கிடந்த இரும்பு பொருள் - கரூரில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூரில் இருந்து நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலை 11.40 மணியளவில் கரூர் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு கரூர் - திண்டுக்கல் செல்லும் ரயில்வே தண்டவாளத்தில் தாந்தோணி ரெயில்வே கேட் வடக்கு பகுதி அருகே சென்று கொண்டிருந்தது.

அப்போது ரெயில் தண்டவாளத்தின் மீது வைக்கப்பட்டிருந்த இரும்பு பொருள் மீது ரெயில் இன்ஜின் ஏறி கடந்து சென்றது. இதனால் இன்ஜினின் முன் சக்கரத்தில் சத்தம் கேட்டுள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த ரெயில் ஓட்டுநர் ரெயிலை வெள்ளியணை ரெயில் நிலையத்தில் நிறுத்திவிட்டு, கரூர் ரெயில்வே போலீசருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன் படி ரெயில்வே ஊழியர்கள் மற்றும் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று தண்டவாளத்தில் ஏற்பட்ட சிறு சேதத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே வெள்ளியணை ரெயில்வே நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட கோவை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் மாற்று இன்ஜின் பொருத்தப்பட்டு நாகர்கோவிலுக்கு புறப்பட்டு சென்றது.

இதையடுத்து ரெயில்வே போலீசார் தண்டவாளத்தில் இரும்பு பொருளை வைத்து ரெயிலை கவிழ்க்க சரி செய்துள்ளனரா? இந்த செயலை செய்தவர்கள் யார்? என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

iron object on railway track in karoor


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->