குளிருக்காக மூட்டிய தீ - தம்பதியினரின் உயிரை பறித்த கொடூரம்.! - Seithipunal
Seithipunal


குளிருக்காக மூட்டிய நெருப்பில் மூச்சுத்திணறி தம்பதியர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பிலங்கானா அருகே த்வாரி தப்லா கிராமத்தில் நடைபெற்ற திருமண விழாவிற்காக மதன் மோகன் செம்வால் மற்றும் அவரது மனைவி யசோதா தேவி ஆகியோர் வந்திருந்தனர். 

அப்போது இரவு 11 மணியளவில் கடும் குளிர் காரணமாக நெருப்பை மூட்டி அதனை அறைக்குள் வைத்து கதவை சாத்திக்கொண்டு குளிர் காய்ந்தனர். இதனால், நெருப்பிடம் இருந்து வெளியேறிய புகையால் இருவரும் தூக்கத்திலேயே மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர். 

மறுநாள் காலை அவர்களது மகன் அவர்களை எழுப்ப கதவை தட்டும் போது எந்த பதிலும் இல்லை. இதனால் சந்தேகமடைந்த உருவாவினர்கள் கதவை உடைத்துச் சென்று பார்த்தனர். 

அப்போது, அந்த தம்பதியினர் படுக்கையில் இறந்த படி கிடந்தனர். திருமண நிகழ்ச்சிக்கு வந்த இடத்தில் குளிருக்காக மூட்டிய தீயில் மூச்சு திணறி தம்பதியினர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

couples died for breething issue in uttarkhant


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->