அடுத்த 6 மாதங்களில் 12 பெரிய படங்கள், 5 மோதல்கள், பாக்ஸ் ஆபிஸில் குழப்பம்! - Seithipunal
Seithipunal


இந்தியன் 2 Vs சர்ஃபிரா : கமல்ஹாசன் நடித்த தமிழ்த் திரைப்படமான 'இந்தியன் 2' வருகின்ற ஜூலை 12 அன்று இந்தியா முழுவதும் வெளியாகிறது. இந்தப் படம் அதே தேதியில் வெளியாகும் அக்‌ஷய் குமார் நடித்த பாலிவுட் படமான 'சர்ஃபிரா'வுடன் மோதவுள்ளது.

ஸ்ட்ரீ 2 VS கேம் கேம் மே  VS வேதா : 3 பெரிய பாலிவுட் படங்கள் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகிறது. அக்‌ஷய் குமாரின் காமெடி த்ரில்லர் படமான 'கேல் கேல் மே', ஷ்ரத்தா கபூரின் 'ஸ்ட்ரீ 2' மற்றும் ஜான் ஆபிரகாமின் 'வேதா', ( இந்த படம் தமிழில் வெளியாகி வெற்றியை கண்ட விக்ரம் வேத படத்தின் ஹிந்தி தழுவல் ) ஆகிய படங்களின் மோதல் பார்க்கத் தக்கதாக இருக்கும்.

தேவ்ரா Vs THEY CALL HIM OG Vs லக்கி பாஸ்கர் : 3 தெலுங்கு படங்கள் வருகின்ற செப்டம்பர் மாதம்  27 ஆம் தேதி அன்று மோதுகின்றன. இவை ஜூனியர் என்டிஆரின் 'தேவ்ரா பார்ட் 1', பவன் கல்யாணின் 'OG' மற்றும் துல்கர் சல்மானின் 'லக்கி பாஸ்கர்'. இருப்பினும், 'OG' இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

கங்குவா VS ஜிக்ரா : சூர்யா, பாபி தியோல் மற்றும் திஷா பதானி நடித்துள்ள தமிழ் திரைப்படம் 'கங்குவா' அக்டோபர் 10 ஆம் தேதியும், ஆலியா பட், வேதாங் ரெய்னா நடித்துள்ள இந்தி படம் 'ஜிக்ரா' அக்டோபர் 11 ஆம் தேதியும் திரைக்கு வரவுள்ளது.

புஷ்பா 2 VS சாவா : அல்லு அர்ஜுனின் தெலுங்குப் படமான 'புஷ்பா 2: தி ரூல்' டிசம்பர் 6 அன்று இந்தியா முழுவதும் வெளியாகிறது. அதே நாளில், சத்ரபதி சாம்பாஜி மகாராஜின் கதையைக் காட்டும் விக்கி கௌஷலின் பீரியட் டிராமாவான 'சாவா' வெளியாகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A big Clash of movies in next 6 months


கருத்துக் கணிப்பு

இந்தியா இரண்டாவது முறையாக டி-20 உலக கோப்பையை வென்றதற்கு காரணம்?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா இரண்டாவது முறையாக டி-20 உலக கோப்பையை வென்றதற்கு காரணம்?




Seithipunal
--> -->