இசைஞானி இளையராஜாவுக்கு ஜூன் 02-இல் பாராட்டு விழா; தமிழக அரசு உறுதி..!
A felicitation ceremony for musician Ilayaraja on June 02nd Tamil Nadu government confirms
இசைஞானி இளையராஜாவுக்கு எதிர்வரும் ஜூன் 02- இல் பாராட்டு விழா தமிழக அரசின் சார்பில் நடத்தப்படவுள்ளது. ''சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்த இசையமைப்பாளர் ஜூன் 02-ஆம் தேதி சென்னையில் பாராட்டு விழா நடத்தப்படும்,'' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சட்டசபையில் விவாதம் நடைபெற்றது. இது குறித்து
வி.சி., - சிந்தனைச்செல்வன் கூறுகையில், தமிழகத்தில் பிறந்த இசை மேதை இளையராஜா, லண்டனில் சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்து, சாதனை படைத்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், லண்டனில் ஒலித்த சிம்பொனி இசையை, தமிழகத்தில் கேட்க முடியாதா என்ற ஏக்கம் தமிழக மக்களுக்கு உள்ளது. எனவே, தமிழகத்தில் சிம்பொனி இசையை இளையராஜா அரங்கேற்ற, தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
அடுத்ததாக தமிழக முதல்வர் ஸ்டாலின் குறிப்பிடுகையில்; இளையராஜாவை நான் சந்தித்தபோது, லண்டனில் ஒலித்த சிம்பொனி இசையை தமிழகத்திலும் அரங்கேற்றம் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டதாகவும், சிம்பொனி இசையை தமிழகத்தில் அரங்கேற்றம் செய்ய இளையராஜாவும் உறுதியாக இருப்பதாக தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டிட்டுள்ளார்.

அத்துடன், லண்டனில் இளையராஜாவின் சிம்பொனி அரங்கேற்றத்தில் பங்கேற்ற, 400 கலைஞர்களையும் நினைத்த நேரத்தில் தமிழகத்திற்கு அழைத்து வர முடியாது எனவும், அதற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், எதிர்வரும் ஜூன் 02-ஆம் தேதி, இளையராஜாவின் பிறந்த நாள். அவர் திரையுலகில் அடியெடுத்து வைத்து, 50 ஆண்டுகள் நிறைவடையும் நாளும் வருகிறது. எனவே, தமிழக அரசின் சார்பில், திரையுலகில் 50 ஆண்டு விழாவும், லண்டனில் சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்ததற்காக, அவருக்கு பாராட்டு விழாவும், ஜூன் 02-ஆம் தேதி சென்னையில் நடத்தப்படும் என்று விவாதத்தின் போது அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
A felicitation ceremony for musician Ilayaraja on June 02nd Tamil Nadu government confirms